

எங்களை பற்றி
யுனிலிவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பிரபல வர்த்தக நாமமான சன்லைட் , கடந்த 135 வருடங்களாக இலங்கையர்களின் நன்மதிப்பை வென்ற சிறந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். சன்லைட், கடந்த காலங்களில் இனங்களுக்கிடையில் அமைதி மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கும் அதனூடாக உறவுகளை பலப்படுத்துவதற்கும் பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொவிட் – 19 நிலைமை காரணமாக எமது சுகாதாரம் மாத்திரமன்றி பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் பாரியளவில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் உற்பத்தி மற்றும் சேவைக்கான கேள்வியும் குறைவடைந்துள்ளது.
இலங்கையர்களான நாம் ஒன்றிணைந்த இனமாகும். நடைமுறையில் கொவிட் நிலைமை காரணமாக இடைவெளியை பேணியபோதும், மனதளவில் நெருக்கமாகி மனிதர்களுக்கு உதவ நினைக்கும் இனமாக எமது மக்கள் உள்ளனர். அவ்வாறான இலங்கையர்களின் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு சன்லைட்டின் மனிதாபிமான நடவடிக்கை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. இதற்கமைய சன்லைட் சிறிய வியாபார அபிவிருத்தி பிரிவுடன் (SEDD) இணைந்து இந்த சிறியளவிலான வர்த்தகர்களை கட்டியெழுப்புவதற்கு சன்லைட் மனிதாபிமான நிதியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. விசேட பொதியிடலுடன் வரும் ஒவ்வொரு சன்லைட் தயாரிப்பிலும் ஒரு ரூபா வீதம் இந்த நிதியத்திற்கு வைப்பிலிடப்படும்.
நீங்களும் இந்த விசேட பொதியிடலுடன் வரும் சன்லைட் தயாரிப்புகளை கொள்வனவு செய்து எமது சிறியளவிலான வர்த்தகர்களை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு உதவுங்கள்.
அத்துடன், சன்லைட் மனிதாபிமான நிதியத்தின் ஊடாக ஆடை கைத்தொழிலுடன் தொடர்புடைய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாளர்கள் 10,000 பேரின் திறன்களை மேம்படுத்துவதற்கு (SEDD) ஊடாக பல பாடநெறிகள் இலவசமாக இணையத்தளத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக 5 மில்லியன் மக்களின் வாழ்வை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பொழுது மனிதாபிமான நடவடிக்கை ஊடாக ஆடை கைத்தொழிலுடன் தொடர்புடைய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாளர்களுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
වැඩමුළු
පාඨමාලා සඳහා අප සමඟ රැදී සිටින්න

වැඩමුළු

වැඩමුළු

වැඩමුළු

වැඩමුළු

වැඩමුළු

වැඩමුළු

වැඩමුළු

වැඩමුළු

වැඩමුළු
